மெல்போர்ன்: முத்தரப்பு தொடரை இந்திய அணி மிக மோசமாக துவக்கியது. நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 65 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதன் மூலம் இந்திய வீரர்கள் மீண்டும் தோல்வி வலியை அனுபவித்தனர்.
இந்தியா,இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு ஒருநாள் போட்டி தொடர் நேற்று துவங்கியது. மெல்போர்னில் நடந்த முதலாவது லீக் போட்டியில், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதின.
சேவக் நீக்கம்: இந்திய அணியில் சேவக் நீக்கப்பட்டார். "டாஸ்' வென்ற இந்திய கேப்டன் தோனி, "பீல்டிங்' தேர்வு செய்தார்.
வினய் மிரட்டல்: ஆஸ்திரேலிய அணிக்கு மாத்யூ வேட், டேவிட் வார்னர் ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 15 ரன்கள் சேர்த்த போது, வினய் குமார் வேகத்தில் வார்னர் (6) போல்டானார். அடுத்து வந்த ரிக்கி பாண்டிங் (2), வினய் குமாரிடம் சரணடைந்தார்.
மழை குறுக்கீடு: ஆஸ்திரேலிய அணி 11 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 35 ரன்கள் எடுத்திருந்த போது, மழை காரணமாக ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. சுமார் மூன்று மணி நேரத்திற்கு பின், இரு அணிகளுக்கும் தலா 32 ஓவர்களாக குறைக்கப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடர்ந்தது.
வேட் அரைசதம்: ஆட்டத்தை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணி கேப்டன் மைக்கேல் கிளார்க் (10), ரோகித் சர்மா சுழலில் சிக்கினார். அடுத்து வந்த மைக்கேல் ஹசியுடன் இணைந்த வேட், தனது முதலாவது அரைசதம் அடித்தார். இவர், 67 ரன்கள் எடுத்த போது, ராகுல் சர்மா சுழலில் போல்டானார். மறுமுனையில் அதிரடியாக ஆடிய மைக்கேல் ஹசி (45), வினய் குமார் வேகத்தில் அரைசதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார்.
ஜடேஜா சொதப்பல்: பின் இணைந்த டேவிட் ஹசி, டேனியல் கிறிஸ்டியன் ஜோடி தூள் கிளப்பியது. ஜடேஜா வீசிய கடைசி ஓவரில் டேவிட் ஹசி இரண்டு சிக்சர் அடித்து அசத்தினார். ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 32 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 216 ரன்கள் குவித்தது. டேவிட் ஹசி (61), டேனியல் கிறிஸ்டியன் (17) அவுட்டாகாமல் இருந்தனர்.
விக்கெட் சரிவு: கடின இலக்கை விரட்டிய இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் மீண்டும் சொதப்பினர். ஒருவர் கூட நிலைத்து நின்று ஆடவில்லை. சச்சின், 2 ரன்களுக்கு ஸ்டார்க் வேகத்தில் பெவிலியன் திரும்பினார். காம்பிரும் (5), ஸ்டார்க் பந்தில் அவுட்டானார். பின் விராத் கோஹ்லி, ரோகித் சர்மா ஜோடி பொறுப்பாக ஆடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 51 ரன்கள் சேர்த்திருந்த போது, மெக்கே வீசிய ஆட்டத்தின் 12வது ஓவரில் கோஹ்லி (31), ரோகித் (21) வெளியேறினர். அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா (4) தாக்குப்பிடிக்கவில்லை.
கடைசி கட்டத்தில் கேப்டன் தோனி, ரவிந்திர ஜடேஜா ஜோடி போராடியது. 6வது விக்கெட்டுக்கு 34 ரன்கள் சேர்த்த போது ஜடேஜா (19) அவுட்டானார். அடுத்து வந்த அஷ்வின் (5), "ரன்-அவுட்' ஆனார். தோகர்டி பந்தில் ராகுல் சர்மா (1), தோனி (29) வெளியேறினர். மெக்கே வேகத்தில் பிரவீண் (15) அவுட்டானார். இந்திய அணி 29.4 ஓவரில் 151 ரன்களுக்கு "ஆல்-அவுட்டாகி' தோல்வி அடைந்தது. டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலியாவிடம் முழுமையாக இழந்த இந்திய அணி, தற்போது மீண்டும் "அடி' வாங்கியிருப்பது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
ஆட்ட நாயகனாக மாத்யூ வேட் தேர்வு செய்யப்பட்டார்.
பெர்த்தில் வரும் 8ம் தேதி நடக்கவுள்ள இரண்டாவது போட்டியில் இந்தியா, இலங்கை அணிகள் மோதுகின்றன.

பிரட் லீ "அவுட்'
"டுவென்டி-20' போட்டியின் போது, ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீயின் வலது கால் எலும்பில் லேசான முறிவு ஏற்பட்டது. இதனால், முத்தரப்பு ஒருநாள் தொடரில் இருந்து நீக்கப்பட்டார். இவரை பரிசோதித்த டாக்டர்கள், நான்கு முதல் ஆறு வாரங்கள் வரை ஓய்வில் இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளனர். இதனால் இவர், அடுத்து நடக்க உள்ள வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் பங்கேற்பதும் சிக்கலாக உள்ளது.சச்சின் சோகம்
தனது 100வது சர்வதேச சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின் நேற்றும் ஏமாற்றினார். சுமார் பத்து மாதங்களுக்கு பின், மீண்டும் ஒருநாள் அரங்கில் காலடி வைத்த இவர், வெறும் 2 ரன்களுக்கு அவுட்டானார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் தனது 99வது சர்வதேச சதம் அடித்த இவர், அதன்பின் ஐந்து ஒருநாள் போட்டி, 11 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ளார். இதில் ஒரு முறை கூட இவரால் சதம் அடிக்க முடியவில்லை.அம்பயர்கள் மறதி
மழை காரணமாக போட்டி தலா 32 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் ஒரு அணிக்கு இரண்டு பேர் மட்டுமே அதிகபட்சமாக ஏழு ஓவர்கள் வீச முடியும். இந்தியா சார்பில் பிரவீண் குமார், வினய் குமார் ஆகியோர் ஏற்கனவே தலா 7 ஓவர்கள் வீசினர். இந்நிலையில் கடைசி ஓவரை வீச ராகுல் சர்மா அழைக்கப்பட்டார். இவர், ஏற்கனவே ஆறு ஓவர்கள் வீசி இருந்தார். இதனை மறந்த அம்பயர்கள், இரண்டு பந்துகள் வீசப்பட்ட பின், திடீரென நினைவில் கொண்டு, கேப்டன் தோனியிடம் எடுத்துக் கூறினர். இதனால் மீதமுள்ள நான்கு பந்துகளை ரவிந்திர ஜடேஜா வீசினார்.கிளார்க் மகிழ்ச்சி
ஆஸ்திரேலிய கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறுகையில், ""முத்தரப்பு தொடரை வெற்றியுடன் துவக்கி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. உண்மையிலேயே இது மிகச் சிறந்த வெற்றி. ஏனெனில் மழைக்கு முன், எங்கள் அணியின் பேட்டிங் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. மழைக்கு பின், மைக்கேல் ஹசி, டேவிட் ஹசி உள்ளிட்டோர் சிறப்பாக பேட் செய்து அணியின் ஸ்கோரை வலுவாக்கினர். அறிமுக போட்டியிலேயே மாத்யூ வேட், அரைசதம் அடித்து தனது திறமையை வெளிப்படுத்தினார். ரிக்கி பாண்டிங், இளம் வீரர்களை போல பீல்டிங்கில் அசத்தினார். இப்போட்டியில் விளையாடிய நிறைய வீரர்கள், "பிக் பாஷ்' தொடரில் விளையாடினர். அந்த அனுபவம் போட்டியில் சாதிக்க உதவியது'' என்றார்.பவுலர்கள் காரணம்: தோனி
கேப்டன் தோனி கூறுகையில், ""மழைக்கு பின், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் ஆதிக்கம் செலுத்தினர். இந்திய தோல்விக்கு பவுலர்கள் முக்கிய காரணம். குறிப்பாக அஷ்வின், ரவிந்திர ஜடேஜாவின் பந்துவீச்சு மோசமாக இருந்தது. நன்றாக விளையாடிக் கொண்டிருந்த கோஹ்லி, ரோகித் சர்மா அடுத்தடுத்து அவுட்டானது திருப்பம் ஏற்படுத்தியது. இளம் வீரர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பதால், அடுத்து வரும் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றி பெற போராடுவோம்,'' என்றார்.