இந்தியாவின் மிக பெரிய ரெயில் பாதையில் நாளை முதல் விவேக் எக்ஸ்பிரஸ் இயக்கம்

test caption1





test caption
இந்தியாவின் மிக பெரிய ரெயில் பாதையாக அசாம் மாநில டிப்ருகார் என்ற இடத்தில் இருந்து தமிழ்நாட்டில் கன்னியாகுமரி வரை இணைக்கும் பணி முடிவடைந்துள்ளது. நாளை முதல் இந்த வழித்தடத்தில் விவேக் எக்ஸ்பிரஸ் இயக்கப்படுகிறது.
4286 கி.மீ  தூரத்தை 82.30 மணி நேரத்தில் கடக்ககூடிய இந்த ரெயில் வாரத்திற்கு ஒரு முறை சனிக்கிழமைகளில் இயக்கப்படும். அதன்படி சனிக்கிழமை இரவு 11.45 மணிக்கு டிப்ருகாரில் புறப்பட்டு புதன்கிழமை காலை 10.25  மணிக்கு கன்னியாகுமரி வந்தடையும். அதுபோல் கன்னியாகுமரியில் இருந்து சனிக்கிழமை மதியம் 2 மணிக்கு புறப்பட்டு புதன்கிழமை காலை 3.30 மணிக்கு டிப்ருகார் வந்தடையும்.

Tags: ,
Related Posts Plugin for WordPress, Blogger...
comments