தொடுபுழா: கேரள மாநிலம், இடுக்கியில் இன்று காலையில் 2 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சில வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் இன்று காலையில் 2 முறை லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இடுக்கி மாவட்டத்தில் உள்ள வண்டிபெரியார், குமிழி, உப்புதரா, பசுபாரா, தோப்புரம்குடி, மூலமற்றம் ஆகிய இடங்களில் காலை 5.27 மணிக்கு 2.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதன்பிறகு காலை 5.45 மணிக்கு அதேபகுதிகளில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அடுத்தடுத்து 2 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் பீதியடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். நிலநடுக்கத்தில் சில வீடுகளில் லேசான விரிசல் ஏற்பட்டது. ஆனால் உயிர்சேதம் எதுவும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.
இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த பகுதிகளில் கடந்த 4 மாதங்களில் 34 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆனால் நிலநடுக்கம் மூலம் உயிரிழப்பு எதுவும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.
kadayanallur